லாலு பிரசாத் யாதவ் விரைவில் குணம் அடைய விழைகிறேன் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் விரைவில் குணம் அடைய மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-08 09:53 GMT

சென்னை,

ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் விரைவில் குணம் அடைய மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை அறிந்து வருந்துகிறேன்.

தனது தந்தையாரின் உடல்நிலை சீராக உள்ளது என்று தேஜஸ்வி யாதவ் கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் விரைவில் குணமடைய விழைகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்