மின்வயர்கள் பதிக்கும் பணி

நத்தம் மாரியம்மன் கோவில் பகுதியில் மின்வயர்கள் பதிக்கும் பணியை பேரூராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.

Update: 2023-02-10 19:00 GMT

நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவின்போது கழுமரம் ஏறுதல், பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது பக்தர்களுக்கு இடையூறாக கோவில் பகுதியில் மின்கம்பிகள் சென்றன. அதனை தரைவழியாக கொண்டு செல்லவேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, மின்வாரியம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மாரியம்மன் கோவில் பகுதியில் தரைவழியாக மின்வயர்கள் பதிக்கும் பணி நேற்று நடந்தது. இந்த பணியை நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன், உதவிப்பொறியாளர்கள் ரவிச்சந்திரன், முகமதுயூசுப், பேரூராட்சி அலுவலக உதவியாளர் ஜெய்சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்