பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி அருகே நல்லனூர் வழியாக தனியார் இன்டெர்நெட் வயர்கள் செல்கிறது. இதில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான வயர்களை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து தனியார் நிறுவனத்தின் மேலாளர் மணி பாப்பாரப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் இன்டெர்நெட் வயர்களை திருடிய 3 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.