மது, சாராயம் விற்ற 5 பேர் கைது

வலங்கைமானில் மது, சாராயம் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-19 19:00 GMT

வலங்கைமான்;

வலங்கைமான் பகுதியில் மது, சாராயம் விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் வலங்கைமான், ஊத்துக்காடு, கீழநெல்லம்பூர், தொழுவூர் உள்ளிட்ட பகுதிகளில் மது பாட்டில்கள் மற்றும் சாராயம் விற்ற 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவா்கள் வலங்கைமான் கீழநெல்லம்பூர் நடுத்தெரு பகுதியை சேர்ந்த சேகர் மகன் ஜெகன் (35), சந்திரசேகரபுரம் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (57), கும்பகோணம் அருகே உள்ள மாடக்குடி பகுதியை சேர்ந்த செல்வராஜ் (60), கும்பகோணம் ராமர் தோட்டம் மூப்பக் கோவில் பகுதியைச் சேர்ந்த புகழேந்தி(23) மற்றும் ரஞ்சித்குமார்(38) என தெரியவந்தது. அவா்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்