மது விற்ற 2 பேர் கைது

திருவையாறு அருகே மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-01 20:08 GMT

திருவையாறு;

திருவையாறை அடுத்த கல்யாணபுரத்தை சேர்ந்தவர் ஹரிஹரசுதன்(வயது33). இவர் மதுபாட்டில்களை வீட்டின் அருகே விற்பனைக்காக வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஹரிஹரசுதனை கைது செய்து 31 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதைப்போல மதுபாட்டில்களை வீட்டின் அருகே பதுக்கி வைத்திருந்த திருவையாறு பகுதியை சேர்ந்த ரஞ்சித் (40) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்