மது விற்ற 2 பேர் கைது
கபிஸ்தலம் அருகே மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கபிஸ்தலம்;
கபிஸ்தலம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கபிஸ்தலம் அருகே உள்ள புத்தூர் அரசு மதுபான கடை அருகில் மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்த கருப்பூர் கீழத்தெருவை சேர்ந்த மணி மகன் சுரேஷ்(வயது26), ஆடுதுறை பெருமாள் கோவில், மெயின் ரோடு பகுதியை ேசர்ந்த கோவிந்தராஜ் மகன் மணிகண்டன் (31) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்கள் வைத்திருந்த 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதைப்போல கபிஸ்தலம் அருகே நரசிம்மபுரம் ராமசாமி கட்டளையை சேர்ந்த தங்கையன் மனைவி செல்வி மது விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்றனர். இதை அறிந்த அவர் தப்பி சென்று விட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் அவர் வீட்டின் கொல்லைப்புறம் இருந்த 10 மது பாட்டில்களை கைப்பற்றினர்.