மது விற்ற 4 பேர் கைது
சுதந்திர தினத்தன்று மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மன்னார்குடி;
சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டிருந்தன. இதனால் போலீசார் மது விற்பனை செய்யப்படுகிறதா? என மன்னார்குடியில் கண்காணித்தனர். அப்போது மன்னார்குடி மேலராஜவீதி, பந்தலடி கீழராஜவீதி, ருக்குமணிபாளையம் ஆகிய பகுதிகளில் மது விற்பனை செய்த வாஞ்சூர் பகுதியை சேர்ந்த அரவிந்த் (வயது29), பைங்காநாடு பகுதியை சேர்ந்த முருகானந்தம் (42), கெழுவத்தூர் பகுதியை சேர்ந்த தமிழரசன்(65), ெநம்மேலியை சேர்ந்த கலைவாணன் (53) ஆகிய 4 பேரை போலீசார் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 350 மது பாட்டில்கள் மற்றும் ரூ.13 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.