வல்லம்;
வல்லம் அய்யனார் கோவில் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வல்லம் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள அய்யனார் கோவில் அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்அவர் அதே பகுதியை சேர்ந்த கர்ணன் (வயது 53) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து 17 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.