பிடாரியம்மன் கோவிலில் மது எடுப்பு விழா

பிடாரியம்மன் கோவிலில் மது எடுப்பு விழா நடைபெற்றது.

Update: 2023-05-03 18:33 GMT

பெருங்களூரில் உள்ள பிடாரியம்மன் கோவிலில் மது எடுப்பு திருவிழா நடைபெற்றது. விழாவில் பெருங்களூர், மட்டையன்பட்டி, வெள்ளவெட்டான்விடுதி, போரம், பாப்பாவயல், நெம்மேலிப்பட்டி, காட்டுப்பட்டி, மாந்தாங்குடி, டி.களபம், மூக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் விரதமிருந்து தங்களது இல்லங்களில் சிறிய குடத்தில் நெல்மணிகள் போட்டு தென்னம்பாலையை சொருகி மல்லிகைப்பூவை சுற்றி பால், சர்க்கரை பல்வேறு மூலிகைகளைக்கொண்டு தயார் செய்தனர். பின்னர் அவற்றை தலையில் சுமந்தபடி பக்தர்கள் தங்களது கிராமங்களில் இருந்து மேள தாளம் முழங்க ஊர்வலமாக பிடாரியம்மன் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்