மொபட்டில் மது கடத்தி வந்த முதியவர் கைது

காரைக்காலில் இருந்து மொபட்டில் மது கடத்தி வந்த முதியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-17 21:01 GMT

திருவிடைமருதூர்;

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் பகுதியில் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரைக்காலில் இருந்து சாக்கோட்டை முத்துப்பிள்ளை மண்டபம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த வீரப்பன் (வயது77) என்பவர் மொபட்டில் 170 மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரைப்பிடித்து திருநீலக்குடி போலீசில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்