மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது

திருக்காட்டுப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-21 20:22 GMT

திருக்காட்டுப்பள்ளி;

திருக்காட்டுப்பள்ளி- பூதலூர் சாலையில் போலீசார் அடஞ்சூர் பஸ் நிறுத்தம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். சோதனையில் மோட்டார் சைக்கிளில் 30 மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஒன்பத்து வேலி கீழத் தெருவை சேர்ந்த நாகராஜன்(வயது55) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்