வில்லிசை கலைஞர்கள் மாநாடு

பாவூர்சத்திரம் அருகே ராமச்சந்திரப்பட்டினத்தில் வில்லிசை கலைஞர்கள் மாநாடு நடந்தது.

Update: 2023-04-03 18:45 GMT

பாவூர்சத்திரம்:

கிராமிய வில்லிசை கலைஞர்கள் முன்னேற்றச் சங்கத்தின் 38-வது ஆண்டு மாநாடு பாவூர்சத்திரம் அருகே உள்ள ராமச்சந்திரப்பட்டினத்தில் நடந்தது. சிவநாடானூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். சங்க தலைவர் ஜெகநாதன் வரவேற்று பேசினார். தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

மாநாட்டில், 58 வயது நிறைந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் கலைநிகழ்ச்சிகள் நடத்த கலைஞர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். இசைக்கருவிகள் மானியம் அனைத்து கலைஞர்களுக்கும் கிடைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் சங்க செயலாளர் சுடலைமுத்து, பொருளாளர் செல்வராஜ், துணைசெயலாளர் தம்பிரான் உள்பட கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட கிராமிய கலைஞர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணைத்தலைவர் மாரியம்மாள் நன்றி கூறினார்.

இந்த மாநாட்டில் 38 வில்லிசை கலைஞர்கள் ராமாயணம், மகாபாரதம், முத்தாரம்மன் கதை, சுடலைமாடசாமி கதை, கருப்பசாமி கதை, அம்மன் கதைகள் மற்றும் சுதந்திர போராட்ட கதை, பொது விழிப்புணர்வு கதை உள்ளிட்ட கதைகள், நகைச்சுவை பாடல்கள் பாடப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்