அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்பீர்களா? - எடப்பாடி பழனிசாமி பதில்

அதிமுக வேட்பாளர் பட்டியல் விரைவில் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2024-01-11 08:27 GMT

சேலம்,

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அதிமுக வேட்பாளர் பட்டியல் விரைவில் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். மக்களவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ளவர்களுக்கு சீட் வழங்கப்படும். மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும்.

அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும்; கூட்டணி அமைந்ததும் முறைப்படி அறிவிக்கப்படும். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் யாருக்கு விருப்பம் உள்ளதோ அவர்கள் கலந்து கொள்ளலாம். எனக்கு கால் வலி இருக்கிறது. வாய்ப்பிருந்தால் நான் கலந்து கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்