ஆனந்தவல்லி வாய்க்கால் கரைகளில் செடி, கொடிகள் அகற்றப்படுமா?

பேராவூரணி ஆனந்தவல்லி வாய்க்கால் கரைகளில் செடி, கொடிகள் அகற்றப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.;

Update:2023-09-22 01:41 IST

பேராவூரணி:

பேராவூரணி ஆனந்தவல்லி வாய்க்கால் கரைகளில் செடி, கொடிகள் அகற்றப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

ஆனந்தவல்லி வாய்க்கால்

பேராவூரணி நகரப் பகுதிக்குள் செல்லும் ஆனந்தவல்லி வாய்க்கால் கரைகளில் இருபுற ஓரங்களிலும் செடி, கொடிகள் வளர்ந்து முட்புதர்கள் மண்டி கிடக்கிறது.

ஆனந்தவல்லி வாய்க்கால் காவிரி ஆற்றின் கிளை வாய்க்காலில் இருந்து பிரிந்து பழையநகரம், மாவடுக்குறிச்சி, பொன்காடு, பேராவூரணி நகர் பகுதி, நீலகண்டபுரம், கழனிவாசல் கொரட்டூர் வரை செல்லும் இந்த ஆனந்தவல்லி வாய்க்கால் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

செடி, கொடிகளை அகற்ற வேண்டும்

இந்த ஆனந்தவல்லி வாய்க்கால் கரையின் இரு புறங்களிலும் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. மேலும் வாய்க்காலில், குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் வீட்டின் மேல் மேயப்பட்ட கூரைகள் கொட்டப்பட்டு குப்பை மேடு போல் காணப்படுகிறது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆனந்தவல்லி வாய்க்காலில் குப்பைகள்கொட்டுவதை தடுக்கவும், வாய்க்காலின் இருபுற கரைகளை சுத்தம் செய்து புதர்களை அகற்றவும், தண்ணீர் தங்கு தடையின்றி செல்ல தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்