கூடலூரில் இருந்து தாளுருக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கூடலூரில் இருந்து தாளுருக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Update: 2022-09-20 18:45 GMT

பந்தலூர்

கூடலூரில் இருந்து தாளுருக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அரசு பஸ்கள்

பந்தலூர் அருகே எருமாடு அரசு தொடக்கபள்ளி, மேல்நிலைப்பள்ளி மகளிர் உயர்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இவ்வாறு படிக்கும் மாணவ- மாணவிகள் கீழ்கையுன்னி, கோரஞ்சால் உள்பட பல பகுதிகளிலிருந்து சென்று வருகின்றனர்.

இதேபோல் தாளூர் தனியார் கல்லூரியிலும் சேரம்பாடி சேரங்கோடு உள்பட பலபகுதிகளை சேர்ந்த மாணவகளும் படித்து வருகின்றனர். கூடலூர் போக்குவரத்து கழக கிளையிலிருந்து நாடுகாணி, தேவாலா, பந்தலூர், சேரம்பாடி, கையுன்னி, எருமாடு, வழியாக தாளூருக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த பஸ்களில் தான் மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் பல்வேறு தேவைகளுக்கும் சென்றுவரவேண்டும். இதேபோல் வருவாய்துறை சான்றுகள் பெறுவதற்கு பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கும், கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கும் பதிவுதுறை உள்ளிட்ட பல அலுவலகங்களுக்கும் சென்று வரவேண்டும். கூடலூர், கோழிப்பாலம், ஆமைக்குளம், அரசு கல்லூரிகளுக்கும் இதேபஸ்களில் தான் சென்று வரவேண்டும்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்தநிலையில் கூடலூரிலிருந்து தாளூருக்கு போதிய அரசு பஸ்கள் இயக்கப்படாததால் காலை மாலை நேரங்களில் மாணவ-மாணவிகளும் பொதுமக்களும் வீடுகளுக்கு செல்ல முடியாமலும் பல்வேறு தேவைகளுக்கு செல்ல முடியாமலும் அவதிப்படுகின்றனர்.

மேலும், கையுன்னி, கோரஞ்சால், சேரம்பாடி, சேரங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்களின் அட்டகாசமும் உள்ளது. அதனால் கூடலூரில் இருந்து தாளுருக்கு கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்