திருமக்கோட்டை-பட்டுக்கோட்டை சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?

திருமக்கோட்டை- பட்டுக்கோட்டை சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா? என்று வாகனஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2023-04-11 18:45 GMT

திருமக்கோட்டை:

திருமக்கோட்டை- பட்டுக்கோட்டை சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா? என்று வாகனஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

அடிக்கடி ஏற்படும் விபத்து

திருமக்கோட்டையில் இருந்து மேலநத்தம் வழியாக பட்டுக்கோட்டை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் மேலநத்தம் மெயின் ரோட்டில் ஆபத்தான வளைவு உள்ளது. இந்த வளைவில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

இந்த வழியாக பள்ளி, கல்லூரி செல்லும் வாகனங்களும், திருமக்கோட்டை எரிவாயு மின் நிலையத்திற்கு வரும் கனரக வாகனங்களும் அடிக்கடி வந்து செல்கின்றன.

வேகத்தடை அமைக்க எதிர்பார்ப்பு

மேலும் திருமக்கோட்டை கடைவீதிக்கு வரும் பொதுமக்கள், மேலநத்தம் வழியாக கீழக்குறிச்சி மதுக்கூர் மற்றும் பட்டுக்கோட்டை செல்லும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இந்த வழியாக தான் சென்று வர வேண்டி உள்ளது.

எனவே இந்த சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? என்று பொதுமக்கள், வாகனஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்