ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா?

திருவாரூர்-நன்னிலம் சாலையில் ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.;

Update: 2023-03-12 18:45 GMT

நன்னிலம்:

திருவாரூர்-நன்னிலம் சாலையில் ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

ஆபத்தான வளைவு

திருவாரூரில் இருந்து ஆண்டிப்பந்தல், பனங்குடி வழியாக நன்னிலம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பனங்குடி அருகே இரண்டு, மூன்று இடங்களில் ஆபத்தான வளைவு உள்ளது.

இந்த சாலை வழியாக தினமும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சைக்கிள், மோட்டார் சைக்கிள்களில் சென்று வருகின்றனர்.

வேகத்தடை அமைக்க வேண்டும்

இந்த ஆபத்தான வளைவில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்லவே வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்