தரமான தார்சாலை அமையுமா... நீண்டநாள் அவதி தீருமா...?
குதிரைவட்டம் கிராமத்தில் தரமான தார்சாலை அமையுமா... நீண்டநாள் அவதி தீருமா...? என்று ெபாதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.;
பந்தலூர்
குதிரைவட்டம் கிராமத்தில் தரமான தார்சாலை அமையுமா... நீண்டநாள் அவதி தீருமா...? என்று ெபாதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
மண்சாலை
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி அருகே குதிரைவட்டம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைக்கு கூலால் வழியாக எருமாடு சென்று வருகின்றனர். ஆனால் அந்த வழியில் மண்சாலை மட்டுமே உள்ளது. இதுவரை தார்சாலை அமைக்கப்படவில்லை.
இதற்கிடையில் தங்கள் கிராமத்தில் தார்சாலை அமைத்து தர வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அம்ரித்துக்கு கோரிக்கை மனு அனுப்பினர். அவரது உத்தரவின்பேரில் குதிரைவட்டம் கிராமத்தில் தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
கட்டுமான பொருட்கள்
அதன் ஒரு பகுதியாக கற்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் கொண்டு வந்து, அந்த மண் சாலையில் கொட்டி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் பணிகள் தொடங்கவில்லை. ஏற்கனவே மண்சாலையில் கடும் சிரமத்துடன் சென்று வரும் அந்த கிராம மக்கள், தற்போது நடுவில் கற்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் நீண்ட நாட்களாக கொட்டி வைக்கப்பட்டு உள்ளதால், மேலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது தவிர வாகனங்கள் கூட சென்று வர முடியாத நிலை உள்ளது.
விரைந்து தொடங்க வேண்டும்
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-
எங்கள் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு அந்த சாைல வழியாகத்தான் வாகனங்களில் உணவு பொருட்கள் கொண்டு வரப்படுகிறது. மழைக்காலத்தில் சேறும், சகதியுமாக மாறுவதால், வாகனங்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. தற்போது கட்டுமான பொருட்களும் கொட்டி வைக்கப்பட்டு உள்ளதால், அந்த சிரமம் மேலும் அதிகரிக்கிறது. இது தவிர மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் என பல தரப்பட்ட மக்கள் எருமாடு பகுதிக்கு சென்று வர அவதியடைந்து வருகின்றனர். எனவே தார்சாலை அமைக்கும் பணியை விரைந்து தொடங்குவதோடு தரமாக அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.