மின்மோட்டார் உதவியுடன் நடுப்பட்டி ஏரியில் தண்ணீர் நிரப்பப்படுமா?
வெண்ணந்தூர் அருகே உள்ள நடுப்பட்டி ஏரியில் மின்மோட்டார் உதவியுடன் தண்ணீர் நிரப்பும் திட்டம் நிறைவேற்றப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
வெண்ணந்தூர்
நடுப்பட்டி ஏரி
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நடுப்பட்டி ஏரி 60 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது. அளவாய்ப்பட்டி ஏரி தண்ணீர் நிரம்பி உபரி நீர் மற்றும் சொரிமலை போன்ற மலைப்பகுதியில் இருந்து நீரூற்றுக்கள் மூலம் ஓடை வழியாக இந்த ஏரிக்கு தண்ணீர் வந்து நிரம்புவது வழக்கம் என முன்னோர்கள் சொல்வார்கள்.
ஆனால் நீண்டகாலமாக இந்த ஏரி நிரம்பவில்லை. இதற்கு காரணம் தற்பொழுது இந்த ஏரிக்கு வரும் அனைத்து வழித்தடங்களும் முற்றிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால் தண்ணீர் வர வழித்தடம் இல்லை. தற்போது இந்த ஏரி முழுவதும் சீமை கருவேல மரங்களால் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லாத நிலை உருவாகி உள்ளது.
வறண்ட நிலையில்
மேலும் மழைக்காலங்களில் காடுமேடாக அடித்துக்கொண்டு வரும் மழைநீர் ஏரிக்கு வந்து அடைகிறது. ஆனாலும் அந்த நீரையும் கூட விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்த ஏரியை சுற்றியுள்ள ஆயக்கட்டு பாசன பகுதியாக சுமார் 200 ஏக்கருக்கு மேல் உள்ளது. இருப்பினும் இந்த ஏரியால் விவசாயிகளுக்கு எந்த ஒரு பயனும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியை சுற்றியுள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் வெங்காயம், கிழங்கு, மக்காச்சோளம், சோளம், தென்னை போன்ற பயிர்கள் பயிர் செய்து உள்ளனர். இந்த பயிர்களுக்கு நீர் ஆதாரமாக விவசாயிகள் கிணற்றின் மூலமாக கிடைக்கும் சிறிய அளவு தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் இயல்பான அளவை காட்டிலும் மழை அதிகமாக பெய்தும், இந்த ஏரி வறண்ட நிலையில் காணப்படுகிறது.
தண்ணீர் நிரப்பப்படுமா?
இதுகுறித்து அலவாய்ப்பட்டி விவசாயி ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:-
எங்கள் பகுதி மிகவும் வறட்சியான பகுதி. குறிப்பாக என்னுடைய தோட்டம் ஏரியின் அருகாமையில் உள்ளது. ஆனால் எந்த ஒரு பயனும் இல்லை. எங்களுடைய கிராம வருவாய் கணக்கில் ஏரி சுற்றி உள்ள விவசாய நிலங்கள் அனைத்தும் நஞ்சை என்று குறிப்பிட்டு உள்ளார்கள். ஆனால் நஞ்சைக்கும், எங்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.
இந்த நிலையில் கடந்த 5 வருடத்திற்கு முன்பு நடுப்பட்டி ஏரிக்கு மின்மோட்டார் மூலம் பம்பிங் செய்து தண்ணீர் கொண்டு வருவதற்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டது. சேலம் சேர்வராயன் மலைப்பகுதியில் உருவாகும் தண்ணீர் திருமணிமுத்தாறு வழியாக நாமக்கல் மாவட்டம் வந்தடைகிறது. முதலில் மின்னக்கல் ஏரி வழியாக இங்கு வந்து கட்டிப்பாளையம், மதியம்பட்டி, அக்கரைப்பட்டி, சேமூர் ஏரி போன்ற ஏரிகள் நிரம்பி கடைசியாக பரமத்தி வேலூர் பகுதியில் காவிரியில் கலக்கின்றது. இந்த நிலையில் மின்னக்கல் ஏரி பகுதியில் இருந்து வெண்ணந்தூர் ஏரிக்கு பம்பிங் மூலம் தண்ணீர் நிரப்பி, அதிலிருந்து செம்மாந்தபட்டி ஏரி, நடுப்பட்டி ஏரிக்கு நீர் கொண்டு வருவதற்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டது. அது தற்போது கிடப்பில் போடப்பட்டு உள்ளது. கிடப்பில் போடப்பட்ட இத்திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்து, நடுப்பட்டி ஏரியை தண்ணீரால் நிரப்பி விவசாயிகள் பயன்பெறும் வகையில் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீர் ஆதாரம் கிடையாது
இது குறித்து விவசாயி சசிக்குமார் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் உள்ள அனைவரும் முழுவதும் விவசாயத்தையே நம்பி உள்ளோம். எங்களுக்கு வேறு தொழில் தெரியாது. விவசாய வேலையை முழுமையாக நாங்கள் செய்வதற்கு போதிய நீர் ஆதாரம் கிடையாது. எந்த ஒரு பயிர் செய்தாலும் நீர் இல்லாமல் காய்ந்து கருகும் சூழ்நிலை அதிகம் ஏற்படுகின்றது. தண்ணீருக்காக எப்போது மழை பெய்யும் என வானத்தை பார்க்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகின்றது. நடுப்பட்டி ஏரிக்கு பம்பிங் திட்டத்தின் மூலம் நீர் நிரப்பினால் நடுப்பட்டி ஏரியை சுற்றி உள்ள ஆயக்காட்டு விவசாயிகளை தவிர, மற்ற விவசாயிகளும் மின் மோட்டார் வைத்து அவரவர்களுக்கு தேவையான தண்ணீரை எடுத்து பயன்பெற ஏதுவாக இருக்கும். குறிப்பாக இந்த ஏரியில் தண்ணீர் நிரப்பினால், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் விவசாயம் செய்வதற்கு பயனாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.வெண்ணந்தூர், அக்.2-