மன்னார்குடி-கூத்தாநல்லூர் இடையே ரெயில் இயக்கப்படுமா?

மன்னார்குடி-கூத்தாநல்லூர் இடையே ரெயில் இயக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2023-08-26 18:45 GMT

கூத்தாநல்லூர்:

மன்னார்குடி-கூத்தாநல்லூர் இடையே ரெயில் இயக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

40 ஆயிரம் மக்கள்

திருவாரூர் மாவட்டத்தில், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி மார்க்கங்களில் பல ஆண்டுகளாக ெரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், அப்பகுதி மக்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர்.

என்ற போதிலும், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

பயணிகள் சிரமம்

இங்குள்ள மக்கள் அடிக்கடி சென்னை மற்றும் வெளி மாநிலங்களுக்கும் சென்று வருகின்றனர். இவற்றில் அதிகமானோர் ெரயிலில் சென்று வருவதையே விரும்புகின்றனர்.

ஆனால், கூத்தாநல்லூர் பகுதியில் ெரயில் சேவை இல்லாததால் 17 கிலோ மீட்டர் தூரம் உள்ள மன்னார்குடி ரெயில் நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு ரெயிலில் சென்று வருகின்றனர். நீண்ட தூரம் சென்று ெரயிலில் ஏறி செல்வதால் பயணிகள் பல்வேறு சிரமங்கள் அடைகின்றனர்.

ரெயில் இயக்க வேண்டும்

குறிப்பாக, பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் சிரமப்பட்டு ரெயிலில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. கூத்தாநல்லூரில் இருந்து 17 கி.மீட்டர் தூரத்தில் மன்னார்குடியில் ரெயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து கூத்தாநல்லூருக்கு ரெயில் இயக்க வேண்டும்.

புதிதாக தண்டவாளம் அமைத்து ரெயில் நிலையம் கட்ட வேண்டும். இந்த வழித்தடத்தில் ரெயில் இயக்கினால் ரெயில்வே துறைக்கும் அதிக வருவாய் கிடைக்கும். எனவே சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகள் மன்னார்குடி-கூத்தாநல்லூர் இடையே ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்