ஆற்றங்கரையில் உள்வாங்கிய சாலை சீரமைக்கப்படுமா?

ஜாம்புவானோடை வீரன்வயல் ஆற்றங்கரையில் உள்வாங்கிய சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2023-07-30 18:45 GMT

தில்லைவிளாகம்:

ஜாம்புவானோடை வீரன்வயல் ஆற்றங்கரையில் உள்வாங்கிய சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

தண்ணீர் வடிவதற்கு

முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை வீரன்வயல் ஆற்றங்கரை சாலையில், வயல்களில் இருந்து தண்ணீர் ஆனது ஆற்றில் வடிவதற்காக ஒரு சட்ரஸ் பகுதி உள்ளது. அதன் வழியாக மழை காலங்களில் மழைபெய்து வயல்களில் தண்ணீர் தேங்கியிருக்கும்போது, அந்த வயல்களில் இருந்து தண்ணீர் வடிவதற்காக இந்த பகுதியில் உள்ள சட்ரஸ் உள்ளது. இதன் அருகில் உள்ள சாலையில் சரிவு ஏற்பட்டு உள்வாங்கி உள்ளது.

சாலை உள்வாங்கியது

இந்த சாலையின் வழியாக ஆலங்காடு, உப்பூர், வடக்கு வெள்ளரிக்காடு மற்றும் வடகாடு பகுதிகளுக்கு செல்பவர்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தற்போது இந்த சாலை சேதம் அடைந்ததால், அப்பகுதியாக செல்லும் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து மழை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே உள்வாங்கி இருக்கும் சாலையை சரி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்