சேதமடைந்த சுள்ளன் ஆற்று பாலத்தின் தடுப்பு சுவர்கள் சீரமைக்கப்படுமா?

சேதமடைந்த சுள்ளன் ஆற்று பாலத்தின் தடுப்பு சுவர்கள் சீரமைக்கப்படுமா?

Update: 2022-06-06 14:25 GMT

வலங்கைமான்:

வலங்கைமான் அருகே சேதமடைந்த சுள்ளன் ஆற்று பாலத்தின் தடுப்பு சுவர்களை சீரமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுள்ளன் ஆற்று பாலம்

வலங்கைமானை அடுத்த விருப்பாச்சிபுரம் ஊராட்சியில் சின்னகரம் கிராமத்தை இணைக்கும் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையின் குறுக்கே பாலம் 14 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பாலம் அருகே சுள்ளன் ஆறு செல்கிறது. இந்த பாலத்தை வலங்கைமான் மற்றும் சின்னகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்த பகுதியில் அமைந்துள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் சென்று வருவதற்கும், விவசாய தொழிலாளர்கள் விவசாய கருவிகள், உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவைகளை வாகனங்களில் எடுத்து ெசன்று வருவதற்கும் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

தடுப்பு சுவர்கள் சேதம்

தற்போது இந்த சுள்ளன் ஆற்று பாலத்தின் இருபக்க தடுப்புசுவர்கள் உடைந்த நிலையில் சேதமடைந்துள்ளது. இதனால் அந்த பாலத்தின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஆற்றில் தவறி விழும் அபாயம் உள்ளது. மேலும் இரவு நேரத்தில் வருபவர்கள் ஆற்றில் விழுந்தால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சுள்ளன் ஆற்றின் பாலத்தின் தடுப்பு சுவர்களை சீரமைத்து தர வேண்டும். இல்லையெனில் சேதமடைந்த பாலத்தை அகற்றிவிட்டு, புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

--

Tags:    

மேலும் செய்திகள்