சேதமடைந்த வாய்க்கால் பாலத்தின் தடுப்பு சுவர் சீரமைக்கப்படுமா?

சேதமடைந்த வாய்க்கால் பாலத்தின் தடுப்பு சுவர் சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-11 18:39 GMT

திருவாரூர் நகரில் சேதமடைந்த வாய்க்கால் பாலத்தின் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாய்க்கால்

திருவாரூர் நகர் வழியாக 'பி' வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் தென்றல் நகர் வழியாக செல்லும் இடத்தில் சிறிய பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் இரு கரைகளில் தடுப்பு சுவர் இருந்தன. தற்போது ஒரு பகுதியில் உள்ள தடுப்புசுவர் இடிந்து, பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்த சாலை போக்குவரத்து மிகுந்த பகுதி என்பதால் வாகனங்கள் பாலத்தை கடந்து செல்லும் போது விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

சீரமைக்க வேண்டும்

இந்த வாய்க்கால் திருவள்ளுவர் நகரை கடந்து செல்லும் இடத்தில் உள்ள பாலமும் தடுப்பு சுவர் இன்றி உள்ளது. இந்த பகுதியில் பள்ளிகள் உள்ளதால் அதிகமான மாணவ-மாணவிகள் பாலத்தில் செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தென்றல் நகர், திருவள்ளுவர் நகர் ஆகிய இரு இடங்களிலும் விபத்தினை ஏற்படுத்தும் வகையில் உள்ள பாலத்தில் இடிந்துள்ள தடுப்பு சுவரை உடனடியாக சீரமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்