ெரயில்வே தொழிலாளர்கள் ஓய்வு விடுதி கட்டிடம் கட்டப்படுமா?

ெரயில்வே தொழிலாளர்கள் ஓய்வு விடுதி கட்டிடம் கட்டப்படுமா?

Update: 2023-06-11 18:45 GMT

திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தில் இடிக்கப்பட்ட இடத்தில் ரெயில்வே தொழிலாளர்கள் ஓய்வு விடுதி கட்டிடம் கட்ட வேண்டு்ம் என்று ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கோரிக்கை மனு

திருச்சி ெரயில்வே கோட்ட பொது மேலாளருக்கு திருவாரூர் மாவட்ட ெரயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்ட செயலாளர் இடையூர் மணிமாறன் ஆகியோர் ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

மீட்டர் கேஜ் காலத்தில் திருத்துறைப்பூண்டி ஒரு முக்கிய சந்திப்பு ஆகும். இங்கிருந்து மயிலாடுதுறை, அகஸ்தியம்பள்ளி, கோடியக்கரை, காரைக்குடி, திருவாரூர் ஆகிய இடங்களுக்கு ெரயில்கள் இயக்கப்பட்டு இருக்கின்றன.

அதிக பணியாளர்களுடன் கூடிய, டெர்மினல் வசதிகள் கொண்ட ஒரு சந்திப்பாக திருத்துறைப்பூண்டி சந்திப்பு இருந்திருக்கிறது. அதிக ெரயில்கள் இங்கிருந்து இயக்கப்பட்டதால் ரெயில்வே தொழிலாளர்கள் தங்குவதற்கு ஒரு பெரிய பிரம்மாண்ட ரன்னிங் ரூம் பில்டிங் என்னும் ஓய்வு விடுதியானது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது.

தொழிலாளர்களுக்கு ஓய்வு விடுதி கட்டிடம்

திருத்துறைப்பூண்டி நிலையம் மற்றும் அகஸ்தியம்பள்ளி கூட்ஸ் வண்டிகளின் தொழிலாளர்கள் இந்த கட்டிடத்தில் தான் தங்கி ஓய்வு எடுத்து இருக்கிறார்கள். இந்த விடுதியில் தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, படுக்கை அறை, கழிவறை, குளியல் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் உள்ளதால் தொழிலாளர்கள் பயன்பெற்று வந்தனர்.

நாளடைவில் இந்த கட்டிடம் சிதிலமடைந்து பராமரிப்பின்றி காணப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் இங்கு தங்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதால் இந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் தங்க விடுதி இல்லாமல் சிரமப்படுகின்றனர்.

கட்டித்தர வேண்டும்

எனவே திருச்சி ெரயில்வே கோட்ட நிர்வாகம் இதில் சிறப்பு கவனம் செலுத்தி இடிக்கப்பட்ட இடத்தில் மீ்ண்டும் தொழிலாளர்கள் ஓய்வு விடுதி கட்டிடம் கட்டித்தர வேண்டு்ம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்