மின்வாரிய அலுவலகம் இடம் மாற்றப்படுமா?

நாகையில் உள்ள மின்வாரிய அலுவலகம் இடம் மாற்றப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2022-09-04 18:26 GMT

வெளிப்பாளையம்:

நாகையில் உள்ள மின்வாரிய அலுவலகம் இடம் மாற்றப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மின்வாரிய அலுவலகம்

நாகை காடம்பாடி பப்ளிக் ஆபீஸ் ரோட்டில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவி மின் பொறியாளர் அலுவலகம் இருந்தது. இந்த அலுவலகத்தின் மூலம் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளுக்கு மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளன.இங்கு மின் இணைப்பு பெற்ற பொதுமக்கள் தங்களுக்கான மின்கட்டண தொைகயை இந்த அலுவலகத்தில் செலுத்தி வந்தனர். மேலும் மின் பழுது குறித்த புகார்களை தெரிவிக்கவும் இந்த அலுவலகத்திற்கு எளிதாக வந்து சென்றனர்.

இடமாற்றம்

ஆனால், இந்த அலுவலக கட்டிடம் பழுதடைந்த காரணத்தால் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு ஒதுக்குப்புறமான நெய்தல் நகரில் ஒரு வாடகை கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த அலுவலகத்திற்கு சென்று வர பொதுமக்கள் முகவரி தெரியாமலும், போக்குவரத்து வசதி இல்லாமலும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.ஆகவே, போக்குவரத்து வசதி உள்ள மெயின் ரோடு பகுதிக்கு மின்வாரிய அலுவலகத்தை இடமாற்றம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்