குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?

ஜாம்புவானோடை அருகே அம்ட்டங்கொல்லையில் உள்ள குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர் விடுத்துள்ளனர்.;

Update:2023-10-01 00:15 IST

தில்லைவிளாகம்:

குண்டும், குழியுமான சாலை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை ஊராட்சியில் அம்பட்டங்கொல்லை சாலை உள்ளது. இந்த சாலையை அப்குதியை சேர்ந்த பல குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் உள்ள புகழ்பெற்ற அய்யனார் கோவிலுக்கு சாலையை கடந்து தான் செல்ல வேண்டும்.

இந்த நிலையில் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் மேம்படுத்தப்படாமல் இருப்பதாக இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தற்போது இந்த சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

சீரமைக்க வேண்டும்

சேதமடைந்துள்ள இந்த சாலையை கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், வேளாண் இடுபொருட்கள் எடுத்து செல்லும் விவசாயிகள், முதியவர்கள், பாதசாரிகள், வியாபாரிகள் என பல்வேறு தரப்பு மக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே சிதறிக்கிடப்பதால் இருசக்கர வாகனங்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சராவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி மோட்டார் வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. மேலும் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் உடல்நிலை சரியில்லாத நேரங்களில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்கு ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் கடும் சிரமப்படுகின்றன. எனவே இப்பகுதி பொது மக்்கள், வாகன ஓட்டிகள் ஜல்லிகற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலையை சீரமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்