ஆபத்தான மின்கம்பம் அகற்றப்படுமா?

திருமருகல் அருகே ஆபத்தான மின்கம்பம் அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்

Update: 2023-09-19 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகல் அருகே ஆபத்தான மின்கம்பம் அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆபத்தான மின்கம்பம்

திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சி பிள்ளையார் கோவில் தெருவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு திருமருகலில் இருந்து சாலையோரமாக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள மின்கம்பம் ஒன்று சிமெண்டு காரைகள் முழுவதும் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இந்த மின்கம்பம் எந்த ேநரத்திலும் சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.

அகற்ற வேண்டும்

இதன் காரணமாக அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து உயிர் பலி ஏற்படுவதற்கு முன்பு ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்