சேதமடைந்த கழிவறை கட்டிடம் சீரமைக்கப்படுமா?

சீர்காழியில் சேதமடைந்த கழிவறை கட்டிடம் சீரமைக்கப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2023-04-13 18:45 GMT

சீர்காழி:

சீர்காழியில் சேதமடைந்த கழிவறை கட்டிடம் சீரமைக்கப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கழிவறை கட்டிடம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பழைய பஸ் நிலைய வளாகம், கொள்ளிடம் முக்கூட்டு ஆகிய இரு இடங்களில் நகராட்சிக்கு சொந்தமான கழிவறை கட்டிடம் செயல்பட்டு வருகிறது. இந்த கழிவறை கட்டிடம் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதி பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் கட்டிடத்தின் கதவுகள், பீங்கான்கள் சேதமடைந்து உள்ளது. மேலும் கழிவறையில் இருப்பவர்கள் வெளியே தெரியும் அளவிற்கு கதவுகள் சேதம் அடைந்த நிலையில் இருப்பதால் இதனை பயன்படுத்தும் பொதுமக்கள் அருவருப்பாகவும் முகம் சுளிக்கும் வகையிலும் பயன்படுத்தி வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதம் அடைந்த கழிவறைகளை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

இது குறித்து சமூக ஆர்வலர் செல்வ முத்துக்குமரன் கூறுகையில், சீர்காழி நகர் பகுதியில் பழைய பஸ் நிலையம், கொள்ளிடம் முக்கூட்டு ஆகிய இரண்டு இடங்களில் நகராட்சிக்கு சொந்தமான கழிவறை கட்டிடம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் உள்ள கதவுகள் பல மாதங்களாக சேதமடைந்த நிலையில் உள்ளே இருப்பவர்கள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனால் இந்த கழிவறை கட்டிடத்திற்கு வரும் பொதுமக்கள் அச்சத்தோடு உபாதைகளை கழிக்க வேண்டிய நிலையில் இருந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சேதம் அடைந்த நிலையில் உள்ள கழிவறை கட்டிடத்தின் கதவுகள், தரைத்தளம் மற்றும் பீங்கான்களையும் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்