சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடம் சீரமைக்கப்படுமா?

வடகோவனூரில் சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடம் சீரமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.;

Update: 2023-03-12 18:45 GMT

கூத்தாநல்லூர்:

வடகோவனூரில் சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடம் சீரமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடகோவனூரில் ரேஷன் கடை கட்டிடம் உள்ளது. இந்த ரேஷன் கடையில் அரிசி, ஆயில், துவரம் பருப்பு, கோதுமை, சர்க்கரை, மண்எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ரேஷன் கடை கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தின் மேற்கூரையில் சில இடங்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

மழைநீர் கசிந்து வருகிறது

மழை காலங்களில் தண்ணீர் கட்டிடத்திற்குள் கசிந்து அத்தியாவசிய பொருட்கள் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், சாலையோரத்தில் ரேஷன் கடை கட்டிடம் உள்ளதால், பொருட்கள் வாங்க பொதுமக்கள் சாலையிலேயே நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்