சேதமடைந்த சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா?

சேதமடைந்த சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா?;

Update:2022-12-24 00:15 IST

கூத்தாநல்லூர் அருகே உள்ள தென்கோவனூர் கிராமத்தில் அந்த பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக சுகாதார வளாகம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த அந்த சுகாதார வளாகம் போதிய பராமரிப்பு இல்லாமல் போனதால் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் சுகாதார வளாகத்தில் அடர்ந்த புதர் செடிகள் காடுகளாக சூழப்பட்டுள்ளது.

தற்போது சுகாதார வளாகத்தில் நுழையவே முடியாத வகையில் உள்ளது. மேலும், சுகாதார வளாகத்தில் ஏற்படுத்தப்பட்ட தண்ணீர் மோட்டார், திருகு குழாய்கள் மற்றும் கட்டிடத்தில் சில இடங்களில் சேதமடைந்து உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கடந்த 7 ஆண்டுகளாக சுகாதார வளாகம் சீரமைப்பு செய்யப்படாமல் உள்ளதால் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சுகாதார வளாகத்தை சீரமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்