சேதமடைந்த கட்டிடம் இடிக்கப்படுமா?
சேதமடைந்த வேளாண் விரிவாக்க மையம் கட்டிடம் இடிக்கப்படுமா என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தியாகதுருகம்,
தியாகதுருகம் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 1968-ம் ஆண்டு வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால், இந்த மையம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது பள்ளி வளாகத்தில் இருக்கும் இந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால் மாணவர்கள் அச்சப்படுகின்றனர். எனவே அந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.