திருச்சி மாநாட்டில் கலந்துகொள்ள சசிகலாவுக்கு அழைப்பு விடுக்கப்படுமா? ஓ.பி.எஸ். சூசக பதில்
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாள், அதிமுக 51-வது ஆண்டு விழா ஆகியவற்றை சேர்த்து திருச்சியில் மாநாட்டுடன் முப்பெரும் விழா நடைபெறும் என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.;
மதுரை,
அதிமுக 51 ஆம் ஆண்டு முப்பெரும் விழா தேதியை அறிவித்தார் ஓ.பி.எஸ் இந்தநிலையில், மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
ஏப்ரல் 24 புரட்சித்தலைவர் பிறந்தநாள், அதிமுக 51 ஆம் ஆண்டு, அம்மாவின் பிறந்த நாள் அனைத்தையும் சேர்த்து முப்பெரும் விழாவாக திருச்சியில் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் உள்ள அதிமுக தொண்டர்கள் லட்சக்கணக்கில் கலந்துகொண்டு அதிமுகவின் வலிமையை நிரூபிப்பார்கள். கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும். அனைவரும் கலந்துகொள்வார்கள் என்றார்.