காட்டுமன்னார்கோவில் அருகே நெல் கொள்முதல் நிலையம் பயன்பாட்டிற்கு வருமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

காட்டுமன்னார்கோவில் அருகே நெல் கொள்முதல் நிலையம் பயன்பாட்டிற்கு வருமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனா்.

Update: 2023-10-11 18:45 GMT

காட்டுமன்னார்கோவில், 

குமராட்சி அருகே வானதிராயன்பேட்டை கிராமத்தில் நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நெல் கொள்முதல் நிலையம் கட்டப்பட்டது. ஆனால் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா காணாமல் வெறும் காட்சி பொருளாகவே உள்ளது. இதனால் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை வெகுதூரத்தில் உள்ள நெல்கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் அந்த கொள்முதல் நிலையத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து வருவதால், விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகாித்து வருகிறது.

எனவே விவசாயிகள் நலன் கருதி நெல்கொள்முதல் நிலையத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்