விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.;

Update: 2023-10-16 19:57 GMT

ஆலங்குளம் வழியாக சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருவேங்கிடம் ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள், லாரிகள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், பட்டாசு தொழிற்சாலைகளுக்கு செல்லும் தொழிலாளர் வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றது. காலையிலும், மாலையிலும் இந்த வாகனங்கள் அதிகமாக செல்வதாலும், பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாலும் ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அருகில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் சிக்னல் விளக்கு அமைத்தால், வாகனங்கள் நின்று செல்லும் வாய்ப்பு உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். எனவே ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே விபத்து ஏற்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்