குறிச்சி-பாலத்தளி இணைப்பு சாலை சீரமைக்கப்படுமா?

குறிச்சி- பாலத்தளி இணைப்பு சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2023-07-12 00:22 GMT

திருச்சிற்றம்பலம்:

குறிச்சி- பாலத்தளி இணைப்பு சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

குண்டும், குழியுமான சாலை

பேராவூரணி ஒன்றியம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள குறிச்சி-பாலத்தளி இணைப்பு தார்ச்சாலை உள்ளது 2 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது அந்த சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது.

இதனால், அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது வயல்களுக்கு இடுபொருட்கள் எடுத்து செல்வதற்கும், டிராக்டர், அறுவடை எந்திரங்களை கொண்டு செல்வதற்கும் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

விபத்துக்கள்

மேலும், விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்அத்துடன் சாலைகளில் ஜல்லி கற்கள் பெயர்ந்து இருப்பதால், வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்துக்களை சந்தித்து வருகின்றனர்.மேலும், இந்த சாலையானது பிரசித்த பெற்ற பாலத்தளி துர்க்கையம்மன் கோவிலுக்கு செல்லும் முக்கிய சாலையாகவும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும். மேலும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்