குப்பைகள் சேகரிப்பு வாகனங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா?

கண்ணமங்கலத்தில் குப்பைகள் சேகரிப்பு வாகனங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.;

Update: 2022-12-08 13:28 GMT

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில் தினமும் காலையில் மகளிர் குழுவைச் சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் தள்ளுவண்டி மூலம் வீடுகளில் குப்பைகளை சேகரித்து, திருவண்ணாமலை செல்லும் மெயின்ரோடு பகுதியில் அமைந்துள்ள பேரூராட்சி வளமீட்பு பூங்காவில் மலைபோல் குவித்து வைத்துள்ளனர்.

இதன் எதிரே தனியார் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் குப்பைகளில் வெளியேறும் துர்நாற்றம், கொசுக்களால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த குப்பைகளை உரிய முறையில் அகற்ற பேரூராட்சி சார்பில் எவ்வித முன்னேற்பாடுகள் செய்யாமல் உள்ளனர்.

தற்போது கண்ணமங்கலம் பேரூராட்சிக்கு 3 குப்பைகள் சேகரிப்பு பேட்டரி வாகனங்கள் வந்து பல நாட்களுக்கு மேலாகியும், இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல், பேரூராட்சி அலுவலகம் எதிரே நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த வாகனங்கள் பயன்பாட்டுக்கு வராத காரணம் குறித்து கேட்டபோது, இன்னும் இதற்கான ஆவணங்கள் பெறப்பட வில்லை என பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.

எனவே உடனடியாக கண்ணமங்கலம் பேரூராட்சிக்கு வந்துள்ள பேட்டரி வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்