அரியலூர்- ஜெயங்கொண்டம் முதன்மை சாலையில் அஸ்தினாபுரம் கிராமத்தில் ஒரு தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தங்களின் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி செல்கின்றனர். இந்த நிலையில் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதினால் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல் போட்டுக்கொண்டு வெளியே வந்து ஜெயங்கொண்டம் சாலையை கடக்கும் போது இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் சாலையில் தடுப்பு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.