அனைத்து அதிவிரைவு ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா?

பூதலூரில் அனைத்து அதிவிரைவு ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2023-04-16 19:53 GMT

திருக்காட்டுப்பள்ளி:

பூதலூரில் அனைத்து அதிவிரைவு ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

பூதலூர் ரெயில் நிலையம்

திருச்சி ெரயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் தரும் ெரயில் நிலையங்களில் ஒன்றாக விளங்குவது பூதலூர் ெரயில் நிலையம். பூதலூர் ெரயில் நிலையத்தில் இருந்து புகழ்பெற்ற பூண்டி மாதா பேராலயம், வரகூர் பெருமாள் கோவில், கோவிலடி அப்பால ெரங்கநாதர் கோவில் ஆகியவற்றிற்கு தென் மாவட்ட பகுதிகளில் இருந்து வருபவர்களும், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருபவர்களும் பூதலூரில் இறங்கி செல்வது வழக்கம். மீட்டர்கேஜ் ெரயில் பாதையில் பூதலூர் ெரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ெரயில்களும் நின்று சென்றன. அகல ெரயில் பாதையாக மாற்றப்பட்டவுடன் கடுமையான போராட்டத்திற்கு பிறகு சில விரைவு ெரயில்கள் நின்று செல்கின்றன.

பக்தர்கள் அவதி

சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் தினசரி விரைவு ெரயில் பூதலூர் ெரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. அதே ரெயில் திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் போதும் பூதலூர் ெரயில் நிலையத்தில் நிற்பதில்லை. இதனால் பூதலூரில் இருந்து திருச்செந்தூர் சென்று சாமி தரிசனம் செய்பவர்கள் திரும்பி வரும் போது நேரடியாக பூதலூர் வருவதற்கு முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் அதிகாலை நேரத்தில் சென்னைக்கு செல்ல வேற ெரயில் ஏதும் இந்த தடத்தில் இல்லை. அதிகாலை 3 மணி அளவில் பூதலூர் வழியாக செல்லும் திருச்செந்தூர்-சென்னை விரைவு ெரயில் பூதலூரில் நின்று சென்றால் இந்த பகுதி மக்கள் சென்னைக்கு செல்வதற்கு வசதியாக இருக்கும்.

அதிவிரைவு ரெயில்கள் நின்று செல்ல வேண்டும்

இதுகுறித்து பல்வேறு தரப்பினர் ெரயில்வே துறைக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திருச்செந்தூரில் இருந்து தினந்தோறும் சென்னை செல்லும் விரைவு ெரயில் பூதலூர் ெரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல சென்னை-ராமேஸ்வரம் விரைவு ரெயில், தாம்பரம் -செங்கோட்டை விரைவு ெரயில் ஆகியவை பூதலூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த தடத்தில் இயக்கப்படும் தினசரி வாராந்திர விரைவு ெரயில்களும் பூதலூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ெரயில் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்