தற்காலிக கழிவறை ஏற்படுத்தப்படுமா?
அரியலூர் பஸ் நிலையத்தில் தற்காலிக கழிவறை ஏற்படுத்த பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் பழைய பஸ் நிலையத்தில் தற்போது கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அண்ணா சிலை அருகே பயணிகள் காத்திருந்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு பஸ்களில் சென்று வருகிறார்கள். இந்த நிலையில் இப்பகுதியில் கழிப்பிட வசதி இல்லாததால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் தற்காலிக கழிப்பறை ஏற்படுத்தி பயணிகளுக்கு உதவ வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.