பிதிர்காடு அருகே கடைகளை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்

பிதிர்காடு அருகே கடைகளை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்;

Update: 2023-06-05 18:45 GMT

பந்தலூர்

பந்தலூர் தாலுகா பிதிர்காடு அருகே முக்கட்டி, சோலாடி, சூசம்பாடி, பாட்டவயல், கைவட்டா, நெலாக்கோட்டை, விலங்கூர் உள்பட பல பகுதிகளில் காட்டுயானைகள் புகுந்து குடியிருப்புகளை முற்றுகையிட்டு அட்டகாசம் செய்து வருகிறது. மேலும், விவசாய நிலங்களுக்குள் புகுந்து வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து வருகிறது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு பிதிர்காடு அருகே சூசம்பாடியில் பிதிர்காட்டிலிருந்து நெலாக்கோட்டை கூடலூர் செல்லும் சாலையில் காட்டுயானைகள் புகுந்தது வாகனங்களை வழிமறித்தது. பின் சூசம்பாடியில் சாலைஓரத்தில் உள்ள அம்சாவின் மளிகை கடை, அலியின் டீ கடைகளை காட்டு யானைகள் சேதப்படுத்தின. மேலும் கடைக்குள் புகுந்து பொருட்களை தின்றன. சம்பவம் அறிந்த பிதிர்காடு வனச்சரகர் ரவி, வனகாப்பாளர், மணி மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அங்கு வந்து காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சேதமான கடைகளை வனச்சரகர் ரவி பார்வையிட்டார். அப்போது காட்டுயானைகளால் சேதமான கடைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்