காரமடை அருகே காட்டு யானைகள் அட்டகாசம்-500 வாழைகள் நாசம்
காரமடை அருகே காட்டு யானைகள் அட்டகாசம்-500 வாழைகள் நாசம்;
காரமடை
காரமடை அருகே உள்ள ஆதிமதையனூர் மேற்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர் தனது விவசாய தோட்டத்தில் வாழைகள் பயிரிட்டு உள்ளார். இந்தநிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியே காட்டு யானைகள் பொன்னுசாமியின் தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டன. அப்போது வாழைகளை தின்றும், மிதித்தும் நாசம் செய்தன. இதனால் 500 வாழைகள் சேதம் ஆனது. இது குறித்து வன றையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில வனத்துறையினர் அங்கு வந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.