சோதனைச்சாவடியை சேதப்படுத்திய காட்டு யானைகள்

சோதனைச்சாவடியை சேதப்படுத்திய காட்டு யானைகள்

Update: 2023-07-29 19:45 GMT

காரமடை

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள காரமடை வனப்பகுதியில் சிறுத்தை, கரடி, காட்டுயானைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா காடுகளை இணைக்கும் முக்கிய வழித்தடமாக காரமடை கோப்பனாரி வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் காரமடை அருகே மேல்பாவியூரில் வனத்துறை சோதனைச்சாவடி உள்ளது.

இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் திடீரென சோதனைச்சாவடியின் இரும்பு கேட்டை சேதப்படுத்தியது. இதனைக்கண்ட வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டன.

-

Tags:    

மேலும் செய்திகள்