கிறிஸ்தவ ஆலயத்தை உடைத்த காட்டுயானைகள்
கிறிஸ்தவ ஆலயத்தை உடைத்த காட்டுயானைகள்;
வால்பாறை
வால்பாறை அருகே உள்ள சிங்கோனா எஸ்டேட் பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுயானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு வந்த 6 யானைகள் கொண்ட கூட்டம், அங்குள்ள ரேஷன் கடையின் கதவை உடைத்தன. மேலும் 3 மூட்டை ரேஷன் அரிசியை தின்றதோடு சிதறடித்து அட்டகாசம் செய்தன. இதை அறிந்ததும், மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, அருகில் உள்ள வனப்பகுதிக்குள் காட்டுயானைகளை விரட்டியடித்தனர்.
இதேபோன்று ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதியில் நள்ளிரவில் புகுந்த 5 யானைகள் கொண்ட கூட்டம், குரங்குமுடி பிரிவில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மாதா ஆலயத்தின் கதவை உடைத்து நேர்ச்சைக்காக கதவின் அருகில் பக்தர்கள் வைத்திருந்த உப்பை தின்றுவிட்டு சென்றது.