வேளாண் உபகரணங்களை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம்

தீத்திபாளையத்தில் தோட்டத்தில் புகுந்து வேளாண் உபகரணங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியது.

Update: 2023-01-21 18:45 GMT


பேரூர்

கோவையை அடுத்த பேரூர் தீத்திபாளையம் கிராமம் அய்யா சாமி மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் நடராஜ் என்பவரது தோட்டம் உள்ளது.

இங்கு நேற்று, அதிகாலை 2 மணியளவில் 5 குட்டிகள் உள்பட 12 யானைகள் புகுந்தன. அவை முதலில், நாகர்பீடம் கோவிலுக்கு சொந்தமான தீவனப் பயிர்களை தின்றும் மிதித்தும் அழித்தது. இதையடுத்து காட்டு யானைகள் நடராஜ் தோட்டத்திற்குள் புகுந்து பல மணி நேரமாக முகாமிட்டது.

அதன்பிறகு காட்டுயானைகள், 2 ஆழ்துளை கிணறுகளில் உள்ள உபகரணங்களை முழுவதையும் உடைத்து சேதப்படுத்தின. மேலும் அந்த தோட்டத்தில், தக்காளி சாகுபடிக்காக போடப்பட்டிருந்த சொட்டுநீர் பாசன உபகரணங்களை சேதப்படுத்தியது.

இது குறித்து தகவல் தெரிவித்து வெகுநேரம் ஆகியும் வனத் துறை யினர் வர வில்லை. இதனால் அந்த பகுதி விவசாயிகளே ஒன்று சேர்ந்து, நீண்ட நேரம் போராடி காட்டு யானைகளை வனப் பகுதியை நோக்கி விரட்டியடித்தனர்.

மேலும் செய்திகள்