காட்டு யானை உலா

கக்கநல்லா சோதனைச்சாவடி அருகே காட்டு யானை உலா வந்தது.;

Update: 2023-09-27 20:15 GMT

கூடலூர்

கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு காட்டு யானைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. காட்டு யானைகள் அவ்வப்போது கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்று வருகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் கூடலூர்-கர்நாடக எல்லையான கக்கநல்லா சோதனைச்சாவடியில் வழக்கம்போல் போலீசார், வனத்துறையினர் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது மாநில எல்லையில் கக்கநல்லா சோதனைச்சாவடி அருகில் காட்டு யானை உலா வந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறையினரும், போலீசாரும் காட்டு யானையை விரட்ட முயன்றனர். ஆனால், யானை உடனடியாக அங்கிருந்து செல்ல வில்லை. பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு காட்டு யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே போலீசார், வனத்துறையினர் நிம்மதி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்