மனைவியின் கள்ளக்காதலன், மாமியார் கைது

Update: 2023-07-24 20:11 GMT

மேச்சேரி:-

மகன்களுக்கு விஷம் கொடுத்து விட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மனைவியின் கள்ளக்காதலன், மாமியார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொழிலாளி தற்கொலை

ேசலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே சூரப்பள்ளி ஊராட்சி கடைக்காரன் வளவை சேர்ந்த அண்ணாமலை என்பவர், தன்னுடைய 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டு அவரும் தின்று தற்கொலை செய்து ெகாண்டார். அவருடைய 2 மகன்களுக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அண்ணாமலையின் மனைவி கோகிலா, யாரோ ஒருவருடன் செல்போனில் பேசியதை கண்டித்ததாகவும், அதனை அவர் கேட்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

கைது

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அண்ணாமலை தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அண்ணாமலையின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அண்ணாமலையின் மனைவி கோகிலாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இளங்கோ (27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தினால் இளங்கோவும், கோகிலாவும் செல்போனில் பேசிக்கொள்வதும், அந்தரங்கமாக எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பி வந்துள்ளார்.

இதையடுத்து கோகிலாவின் கள்ளக்காதலன் இளங்கோ, அண்ணாமலையின் மாமியார் மல்லிகா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கோகிலாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் இன்னும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வரும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்