மனைவிக்கு கத்திக்குத்து; கொத்தனார் கைது

மனைவியை கத்தியால் குத்திய கொத்தனார் கைது செய்யப்பட்டார்

Update: 2022-09-27 21:30 GMT

பாளையங்கோட்டை கோரிப்பள்ளம் மேத்யூ தெருவை சேர்ந்தவர் ஐசக் சாமுவேல் (வயது 29). கொத்தனார். இவரது மனைவி சித்ரா (22). ஐசக் சாமுவேலுக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஐசக் சாமுவேல் வீட்டில் இருந்த கத்தியால் சித்ராவை குத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த சித்ரா பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐசக் சாமுவேலை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்