மனைவி மாயம்; கணவர் போலீசில் புகார்

மனைவி மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் அளித்தார்.;

Update: 2023-03-20 18:53 GMT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே வானத்திரியான்பட்டிணம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சிவனேசன்(வயது 30). இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சுபலெட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் சிவேனசன் காலையில் வேலைக்கு சென்று விட்டு மீண்டும் 6 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்து போது, மனைவி சுபலெட்சுமியை காணவில்லை. பின்னர் உறவினர்கள் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து சிவனேசன் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்