கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

கரூரில் கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-07-29 18:41 GMT

தற்கொலை

கரூர் அரசு காலனி பகுதிக்குட்பட்ட கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது 37). டெக்ஸ்டைல் கூலி தொழிலாளியான இவருடைய கணவர் பெருமாள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதில் இருந்து மீளமுடியாமல் புவனேஸ்வரி கடந்த சில மாதங்களாகவே துக்கத்தில் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புவனேஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வழக்குப்பதிவு

இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் புவனேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்