விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக மழை

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

Update: 2022-11-29 18:39 GMT


விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும், விருதுநகர் மாவட்டத்தில் போதிய மழை பெய்யவில்லை.

இந்தநிலையில் கேரள பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது.

பரவலாக மழை பெய்ததால், விருதுநகர் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவித்து கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவிட்டார். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மழை அறிவிப்புக்கு பின்னர் ஒரு சில பகுதிகளில் மட்டுேம மழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டமாகவும், சில இடங்களில் சாரலாகவும் பெய்தது.

மழை அளவு

குறிப்பாக தாயில்பட்டி, ராஜபாளையம், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:- அருப்புக்கோட்டை-6, சாத்தூர்-6, ஸ்ரீவில்லிபுத்தூர்-58, சிவகாசி-23.2, விருதுநகர்-5, ராஜபாளையம்-18, காரியாபட்டி-8.2, வத்திராயிருப்பு-39.8, பிளவக்கல்-9, வெம்பக்கோட்டை-10.7, கோவிலாங்குளம்-10. 

Tags:    

மேலும் செய்திகள்